ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா முதல் அலையின் தாக்கம் தமிழகத்தில் 2020ம் வருடம் பரவிய போது மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பிறகு நவம்பர் மாதம்தான் திறக்கப்பட்டது. அதற்கடுத்து இரண்டாவது அலையின் தாக்கம் 2021ம் வருடம் வந்த போது ஏப்ரல் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டு, செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த வருடக் கடைசியில் ஒமிக்ரான் வடிவில் கொரானோவின் மூன்றாவது அலை வந்த போது தியேட்டர்கள் மூடப்படவில்லை. ஆனாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி ஜனவரி மாதத்திலிருந்து அமல்படுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு இருந்ததால் தினமும் 3 காட்சிகளை நடத்தவே தியேட்டர்கள் சிரமப்பட்டன. பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பொங்கலுக்கும் அதற்குப் பிறகும் வர வேண்டிய சில முக்கிய படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது..
50 சதவீத இருக்கை இருந்தால் போதும், தினசரி 4 காட்சிகள், ஞாயிறு காட்சிகள் ஆகியவற்றை நடத்தினாலே வசூலைப் பெறலாம் என்பதை கடந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த 'மாஸ்டர்' படம் நிரூபித்தது. அதனால், தற்போது பலரும் தங்களது படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். கடந்த வாரத்தில் பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுமே புதிய படங்களின் வெளியீடு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இந்த வாரம் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்', அடுத்த வாரம் விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி விவசாயி' ஆகிய படங்களின் அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இன்னும் பல படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து தமிழ் சினிமா சீக்கிரமே மீண்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.