‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'புஷ்பா' படம் மியூசிக்கலாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படத்தின் பாடல்கள் போல ஹிட்டானது. இப்படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான 'ஸ்ரீவள்ளி…' பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பாடியது ஸ்ரீராம்தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'புஷ்பா' நாயகன் அல்லு அர்ஜுன் திடீரென 'புஷ்பா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் 'ஸ்ரீவள்ளி' பாடலை சித் ஸ்ரீராம் பாடிய வீடியோவைப் பகிர்ந்து பெரிதும் பாராட்டியுள்ளார்.
“ஓய்வாக இருக்கும் போது இதை எழுத வேண்டும் என்றிருந்தேன். எனது சகோதரர் சித் ஸ்ரீராம் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியில் 'ஸ்ரீவள்ளி' பாடலை மேடையில் பாடினார். எந்த இசையும் இல்லாமல் பாடி ஆரம்பித்தார். அவரது குரலுக்கு ஆதரவாக இசைக் கருவிகள் மெதுவாக வரும் என காத்திருந்தேன், ஆனால், வரவில்லை. எந்த இசையும் இல்லாமல் அவர் பாடினார். அவரது குரலில் அடித்துச் செல்லப்பட்டேன். எனது தலையில் ஏதோ ஒரு மேஜிக்கல் நிகழ்கிறது என நினைத்தேன். அவருக்கு இசை தேவையில்லை…..அவர்தான் இசை,” எனப் பாராட்டியுள்ளார்.




