தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய்யின் 65வது படமாக உருவாகி வரும் 'பீஸ்ட்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து விஜய்யின் 66வது படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்க உள்ளார்கள். அப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இன்னும் ஒரு மாதமே படப்பிடிப்புக்கு உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் சமீப காலங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் தமன் இசையமைக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. விஜய்யின் 65வது படமாக 'பீஸ்ட்' படம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் விஜய் நடிப்பதாக இருந்தது. அப்போது அந்தப் படத்திற்கு தமன் தான் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால், முருகதாஸ் படத்தை இயக்கவில்லை என்றானதும் தமனும் அப்படத்தில் பணியாற்றவில்லை. எனவே, விஜய்யின் 66வது படத்தில் தமன் இசையமைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
கதாநாயகியாக பாலிவுட் நடிகைகள் யாராவது புதிதாக வருவார்களா, அல்லது ஏற்கெனவே விஜய்யுடன் ஜோடியாக நடித்த நடிகைகள் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வெகு சீக்கிரத்திலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.