12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
பாகுபலி படத்தின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் ராஜமவுமௌலி. இந்நிலையில் அந்த படத்திற்கு இணையாக தற்போது அவர் இயக்கி இருக்கும் படம் ஆர் ஆர் ஆர் . ராம்சரண் , ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் கடந்த பொங்கல் அன்று திரைக்கு வர இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது அப்படத்தின் வெளியீட்டை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்ததை அடுத்து சில நிறுவனங்கள் நேரடியாக தங்களது ஓடிடியில் வெளியிடுவதற்கு 500 கோடி ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார்கள். ஆனால் அதற்கு ராஜமவுலியோ, ஆர் ஆர் ஆர் படம் கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியாகும். தியேட்டருக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும். காரணம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் மட்டுமே ரசிகர்களுக்கு முழுமையான திருப்தி கிடைக்கும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அவசரப்பட்டு ஓடிடி யில் வெளியிட்டால் இந்த படத்திற்காக நாங்கள் கொடுத்த உழைப்பு வீணாகிவிடும். உலகத்தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திட்டமிட்டபடி மக்களை போய் சேராது. அதனால் உலகமெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ஆர் ஆர் ஆர் படத்தை வெளியிட்ட பிறகுதான் ஓடிடியில் வெளியிடுவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டாராம்.
அதனால் ஆர் ஆர் ஆர் படம் திரை அரங்குகளில் வெளியாகி மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் டிஜிட்டல் ரைட்ஸை ஜி5 நிறுவனத்திற்க்கும், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஸ் ஆகிய மொழிகளின் ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.