யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலி இருவருக்கும் கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தையின் தனிப்பட்ட உரிமை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அக்குழந்தையின் புகைப்படங்களை எந்த விதத்திலும் எடுத்து வெளியிட வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது அனுஷ்கா அவரது குழந்தையான வாமிகாவை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகிவிட்டது. அப்புகைப்படம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதன்பின்பு அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், “நேற்று மைதானத்தில் எங்களது மகளின் புகைப்படம் படமாக்கப்பட்டு அது பெரிய அளவில் ஷேர் ஆகிவிட்டது குறித்து அறிந்தோம். கேமரா எங்களை நோக்கி இருக்கிறது என்ற கவனமில்லாத காரணத்தால் நாங்கள் படம் பிடிக்கப்பட்டோம். இந்த விவகாரத்தில் எங்கள் வேண்டுகோளும், நிலைப்பாடும் அதேதான். ஏற்கெனவே நாங்கள் சொன்னபடி வாமிகாவின் புகைப்படத்தை படமெடுக்கவோ, வெளியிடவோ செய்யாமல் இருந்தால் நாங்கள் உண்மையில் பாராட்டுவோம்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இருப்பினும் வாமிகாவின் புகைப்படம் பகிரப்பட்டு தற்போது டுவிட்டரில் #VamikaKohli என்று டிரென்டிங்கில் வேறு உள்ளது.