காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
தென்னிந்தியத் திரையுலகத்தின் லேடி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் விஜயசாந்தி. அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே தனது ஆக்ஷன் நடிப்பால் 'டப்' கொடுத்தவர். இடைப்பட்ட காலத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் இறங்கினார்.
14 வருட இடைவெளிக்குப் பிறகு 2020ல் மகேஷ்பாபு நாயகனாக நடித்த 'சரிலேறு நீக்கெவரு' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கடுத்து 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' என்ற படத்தில் நடித்தார். அப்படம் கடந்த வாரம் வெளியாகி ஓடி வருகிறது.
படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில்,
“எங்கள் கடின உழைப்பின் பலனைக் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்கள் சமரசம் செய்து கொள்ளளாமல், இந்தப் படத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளனர். இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகள் நிறைந்த கதை.
வெளிவரும் கருத்துக்களில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புவது பொருத்தமானதல்ல. ஒவ்வொரு புதிய படத்தையும் இடிக்க முயற்சிப்பவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்தத் துறையை வாழ விடுங்கள். ஒரு படத்தை முழு மனதுடன் ஆசீர்வதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு தயாரிப்பாளரின் முதலீட்டைக் கெடுக்காதீர்கள். இந்தப் படம் இறுதியில் வெற்றி பெறும். இந்தப் படத்தின் தயாரிப்பின் போது கல்யாண் ராமுடன் எனக்கு ஒரு நேர்மறையான பிணைப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே, அவர் என்னை 'அம்மா, அம்மா' என்று அன்பாக அழைத்தார், மேலும் மிகுந்த அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தினார்," என்று பேசினார்.
சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எந்த ஒரு புதிய படத்தையும் 'டிரோல்' என்ற பெயரில் கண்டபடி விமர்சிப்பது ஒரு பேஷனாகிவிட்டது. அதனால் பல படங்கள் பாதிக்கப்படுகின்றன. அப்படி விமர்சிப்பவர்களைக் கண்டித்து சரியாகப் பேசியிருக்கிறார் விஜயசாந்தி.