சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
விஜய் டிவியின் 'பகல் நிலவு' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சஹானா. தொலைக்காட்சி தொகுப்பளினியாக சின்னத்திரையாக கேரியரை ஸ்டார் செய்த சஹானா, வெள்ளித்திரையில் பாலாவின் தாரைதப்பட்டை, விஜய் ஆண்டனியின் சலீம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'தாலாட்டு', 'கண்ணான கண்ணே' தொடரில் நடித்து வரும் அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடித்த எபிசோடுகள் தற்போது ஒளிபரப்ப தொடங்கியுள்ளன. ஆதிரா கதாபாத்திரம் ஒரு நெகடிவ் ரோல் என்பதால், சஹானா அந்த கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.