தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்து கடந்தாண்டு வெளியான படம் ‛ஜெய்பீம்'. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்றதில் 'ஷாஷங் ரிடெம்ப்ஷன்' திரைப்படத்தை முந்தி 'ஜெய்பீம்' சாதனை படைத்தது. அதேபோல், ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் 'ஜெய் பீம்' இடம்பெற்றது.
சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யு-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் 'ஜெய் பீம்' திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் 'ஜெய் பீம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இடம்பெற்றிருந்தது.