ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான், அவரது சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரசியமான தகவல்கள், செய்திகளைப் பகிர்வார்.
சற்று முன் இரண்டு சிறுமிகள் பாடிய ஒரு தமிழ்ப் பாடலின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்த இரண்டு சகோதரிகள் சில சீரியசான கேள்விகளை இந்தப் பாடல் மூலம் கேட்கிறார்கள்” என்றும், “தண்ணீர், உணவு, மனித நேயம், அன்பு, இரக்கம்” ஆகிய ஹேஷ்டேக்குகளுடனும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான்.
அந்த சிறுமிகள் பாடிய பாடல் இயக்குனர் பாலா தயாரிப்பில், அருணகிரி இசையமைப்பில், அதர்வா ஆனந்தி, லால் நடித்து 2015ல் வெளிவந்த 'சண்டி வீரன்' படத்தில் இடம் பெற்ற 'தாய்ப்பாலும் தண்ணீரும்…' என்ற கிராமியப் பாடல். இந்த சிறுமிகளின் பாடலைப் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டிருப்பதால் அந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.