ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரக் குடும்பமாக ரஜினிகாந்த் குடும்பமும், தனுஷ் குடும்பமும் இருக்கிறது. ரஜினிகாந்தின் இரு மகள்களும் திரைப்படங்களை இயக்கியுள்ளனர். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஒரு திரைப்பட இயக்குனர், அண்ணன் செல்வராகவன் திரைப்பட இயக்குனர், தற்போது நடிகரும் கூட.
திரையுலகில் அவ்வப்போது வெளிவந்த சில வதந்திகளின் ஊடேதான் தனுஷ், ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை கடந்த 18 வருடங்களாக இருந்தது. ரஜினிகாந்தின் மருமகன் என்று ஆன பிறகு தனுஷின் திரையுலக வாழ்க்கையிலும் அவருக்கென ஒரு தனி இமேஜ் உருவாகி நடிகராகவும் ஒரு ஏற்றத்தைக் கண்டார். சில முக்கிய இயக்குனர்களின் படங்கள் அவரை சிறந்த நடிகராக உருமாற்றின.
2010ல் வெளிவந்த 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார். மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் '3' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் அவரை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. பின்னர் ஹிந்தியிலும் அறிமுகமானார். அமிதாப்புடன் இணைந்து நடித்தார். பிரெஞ்ச் படம், ஹாலிவுட் படம் என சர்வதேச நடிகராகவும் மாறியுள்ளார் தனுஷ்.
தனுஷ், ஐஸ்வர்யா இருவரது பிரிவு அறிவிப்பு திரையுலகில் உள்ள அவர்களுக்கு நெருக்கமானவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு சிலர் அவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் ரஜினி கூட கோபத்தில் மனைவி லதாவை பிரிய நினைத்தாகவும், அப்போது ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே பாலசந்தர் உள்ளிட்டவர்கள் சமரசம் பேசி அவர்களை மீண்டும் சேர்த்து வைத்ததாகவும் திரையுலகில் ஒரு தகவல் சுற்றி வருகிறது.
இந்த சமரச முயற்சி எந்த அளவிற்குச் செல்லும் என்பது இனிமேல்தான் தெரியும். சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பெயரை இன்னும் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்றே அவர் தொடர்வது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.