ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே இரண்டு மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது சில பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்க வைத்தார். இப்போது திடீரென மீண்டும் அந்த சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட வேறு சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களுக்கும் சேர்த்து 20 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளார். சில பிரபலங்களும் அப்புகைப்படங்களுக்கு லைக்குகளைக் கொடுத்துள்ளனர்.
பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த 'ராதேஷ்யாம்' படம் கடந்த வாரம் பொங்கலுக்கு வெளிவந்திருக்க வேண்டிய படம். கொரானோ அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புள்ள நிலையில், படம் வெளிவந்த பின் பூஜாவின் மார்க்கெட் இன்னும் உச்சத்திற்குச் செல்லும் என திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூஜா நடித்துள்ள 'பீஸ்ட்' படம் வெளிவந்தால் இங்கும் முன்னணி நடிகையாக உயர வாய்ப்புள்ளது.