டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். காதலனால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்கும் வீராங்கனையாக நடித்திருந்த அவருக்கு ரசிகர்களிடம் நிறையவே பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக எப்.ஐ.ஆர் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனது காதலரையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ரெபா மோனிகா ஜான். இவர்களது திருமணம் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என முக்கியமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள நேற்றைய தினம் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சில் நடைபெற்றுள்ளது. தனது நீண்ட நாள் பாய்பிரண்ட் ஆன ஜோமோன் ஜோசப் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார் ரெபா மோனிகா ஜான்.
கடந்த வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரெபாவின் பிறந்தநாளன்று வாழ்த்துக்களுடன் சேர்த்து தனது காதலையும் தெரிவித்தார் ஜோமோன் ஜோசப். அதை ஏற்றுக்கொண்ட ரெபா மோனிகா ஜான் ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே அந்த அழகான காதலை திருமண பந்தம் ஆக மாற்றி புதிய வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.