இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமான தமன், பின்னர் இசையில் கவனத்தை செலுத்தினார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தமிழ் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தியா முழுக்க கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவரைத்தொடர்ந்து தமனும் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமன் கூறுகையில், ‛‛கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எனது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் சிவகார்த்திகேயனின் 20வது பட பணிகளை துவங்கி அது தொடர்பான நிகழ்வுகளை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து இருந்தார் தமன். இப்பட இசை பணியின்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் அனூதீப் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இதனால் இவர்களும் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.