ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2021ம் ஆண்டு தமிழில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தைப் பிடித்த படமாக விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் இருந்தது.
தமிழில் படத்தை வெளியிட்டதோடு, தெலுங்கு, ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தெலுங்கில் சுமாரான வெற்றிப் படமாகவும், ஹிந்தியில் தோல்வியாகவும் இப்படம் அமைந்தது. ஆனாலும், ஹிந்தி ரீமேக் ரைட்ஸ் பெரும் விலைக்குப் போனது.
பொதுவாக ஹிந்தியில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்கள் அடிக்கடி வருவது வழக்கம். 'மாஸ்டர்' படத்தில் விஜய், விஜய் சேதுபதி என இரண்டு ஹீரோக்கள் நடித்து, இருவருக்குமே படத்தில் சரியான முக்கியத்துவம் இருந்ததால் ஹிந்திக்குப் பொருத்தமான படம்தான். சல்மான்கான் கூட இப்படத்தைப் பார்த்தார், அவரும் நடிக்கலாம் என்றார்கள். ஆனால், ஏனோ சல்மான் பின்வாங்கிவிட்டார்.
இதனிடையே, ஹிந்தியில் இரண்டு முன்னணி நடிகர்களிடம் இது பற்றி பேசி முடித்துவிட்டதாகவும் விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டம் வைத்துள்ளார்களாம்.