ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாளத்தில் கடந்த வருடம் இணையதளத்தில் வெளிவந்து பெரும் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்ற படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
அப்படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் நடிக்க கண்ணன் இயக்கத்தில் ரீமேக் செய்தார்கள். புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தமிழுக்காக படத்தின் பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் மலையாளத்தில் இருந்த அதே பெயரே போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.
ஆனால், 'The' என்ற ஆங்கில எழுத்து தமிழில் 'தீ' என இடம் பெற்றிருந்தது. மலையாளத்தில் படத்தைப் பார்ததவர்களுக்கு 'தீ' என்பதும் பொருத்தமான ஒரு தலைப்புதான் அதனால்தான் அப்படி வைத்துள்ளார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது. ஆனால், அது எழுத்துப் பிழையுடன் வெளியான போஸ்டர் என்பது இன்று தெரிய வந்துள்ளது.
இன்று படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'The' என்பதற்கான தமிழாக்கம் 'தி' என தவறு சரி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழில் வேறு புதிதாக தலைப்பு வைக்கக் கூட யோசிக்காமல் அதே தலைப்பையே பயன்படுத்துகிறார்களே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.