ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. பிரம்மாண்ட உருவாகியுள்ள இப்படம் வரும் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் டிவி நேர்காணலில் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ராமோஜி பிலிம் சிட்டியில் ஒருமுறை அஜித்தை சந்தித்தேன். பெரிய உணவகம் ஒன்றில் அவர் வேறு இடத்தில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தார். நான் இங்கே இருந்தேன். அப்போது என்னை பார்த்த அஜித், சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்.
அதன்பிறகு என்னை அழைத்து சென்று அவர் உட்கார சொன்னார். அப்போது என்னுடைய மனைவி வந்தார். அவரிடம் நான் அஜித் என்று அறிமுகம் செய்துக்கொண்டார். இந்த விஷயம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது. சமீபத்தில் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது என்னவென்றால், ரசிகர்கள் அவரை தல தல என்று அழைப்பார்கள். தல வேண்டாம், அஜித் அல்லது ஏகே என கூப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்திற்கு உண்மையாகவே தலை வணங்குகிறேன் என்று அவர் அஜித்தை புகழ் தள்ளியுள்ளார்.