ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சந்தித்து பேசினார்கள். இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழக முதல்வரிடம் திரை உலகத்தை மீட்டெடுத்திட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு அளித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். வி.பி.எப். கட்டணம் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திடவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் முனைவர் வி.ப.ஜெயசீலன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.