50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

மான்ஸ்டர் படம் மூலம் காமெடி கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் தனது மீள் வரவை உறுதி செய்த நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அந்தவகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட நிலையில் தற்போது இந்தப்படத்தில் தனது டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் எஸ்'ஜே.சூர்யாவும் இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கல்லூரி பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.