ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஒரே ஒரு இடுப்பு மடிப்பு போட்டோவால் தமிழக இளைஞர்களை சுண்டி இழுத்து கட்டிப் போட்டவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை என நடிப்பில் முத்திரை பதித்திருந்தாலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு போட்டோஷூட்டால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அடுத்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் என ஏறிய கிராப்பின் விளைவால் தற்போது ரம்யா பாண்டியன் கை நிறைய படங்கள்.
சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலும் இயல்பான கிராமத்து பெண்ணாக நடித்து பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் தனுஷுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அவர் நடிப்பில் வெளியாகி உள்ள அட்ரங்கி ரே படத்தை பார்த்து வாழ்த்தி, அவரும் ஒரு புரொமோஷன் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். அனேகமாக தனுஷின் அடுத்த படங்கள் ஒன்றில் இவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது.