''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'என் பெயர் மீனாட்சி' மூலம் சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ப்ரியா பிரின்ஸ். முன்னாதாக பல சேனல்களிலும், நிகழ்ச்சிகளிலும், செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ள ப்ரியா, சமீபத்தில் கண்ணானே கண்ணே தொடரில் மேனகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து அந்த கதாபாத்திரமும் முடித்து வைக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வேறு யாரும் அதில் நடிக்கவில்லை.
இந்நிலையில் அவர் பழைய மேனகாவாக திரும்பி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கண்ணான கண்ணே சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்த செல்பியை ஷேர் செய்து, தனது கம்பேக்கை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.