பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் அதையடுத்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, கொம்பன், வேதாளம் என பல வெற்றி படங்களில் நடித்தார். இடையில் மேற்படிப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன்பின் முத்தையா இயக்கிய புலிகுத்தி பாண்டி மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இவர் நடித்துள்ள யங் மங் சங் படமும் இன்னும் வெளிவராமல் உள்ளது.
இந்த நிலையில் தற்போது புதுமுக இயக்குனர் முருகேஸ் பூபதி என்பவர் இயக்கும் ஒரு படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் . காதல் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக காமெடியன் யோகி பாபு நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக காமெடியாக நடித்து வந்தபோதும் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தில் இருவருமே காதலிப்பது போன்று தான் படம் இருக்கும் என்கிறார்கள். அதேசமயம் இந்த படம் வழக்கத்திலிருந்து ஒரு மாறுபட்ட காதல் கதையில் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.