பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
இந்தியத் திரையுலகின் முக்கியமான இயக்குனராக மாறிவிட்ட ராஜமௌலியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
24 மணி நேரத்தில் சில பல புதிய சாதனைகளை இந்த டிரைலர் படைத்தது. தற்போது தெலுங்கு டிரைலரின் பார்வையை விட ஹிந்தி டிரைலரின் பார்வை அதிகமாக உள்ளது. இன்று காலை 11 மணி நேர நிலவரப்படி தெலுங்கு டிரைலர் 25 மில்லியன் பார்வைகளுடனும், ஹிந்தி டிரைலர் அதைவிட 3 மில்லியன் பார்வைகள் அதிகமாக 28 மில்லியன்களுடனும் இருக்கிறது. தமிழ் டிரைலர் 4 மில்லியன், கன்னட டிரைலர் 6 மில்லியன், மலையாள டிரைலர் 2 மில்லியன் பார்வைகள் என ஒட்டு மொத்தமாக 65 மில்லியன் பார்வைகளை 48 மணி நேரத்தில் கடந்துள்ளது.
இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புகளை தொடர்ந்து இரண்டு நாட்களில் நடத்தி முடித்துவிட்டது படக்குழு. இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பை, நேற்று காலை பெங்களூரு, நேற்று மாலை சென்னை, இன்று காலை ஐதராபாத் என தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.