கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு |
சரத்குமார், மேக்னா நாயுடு நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கி உள்ள படம் கடைசி காதல் கதை. இதில் வர்மா படத்தில் நடித்த ஆகாஷ் பிரேம்குமார், ஷாலு ஷம்மு, சாம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளர். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது: தினமும் சாமி கும்பிடும்போது பொதுவான வேண்டுதல் எதையாவது சாமியிடம் கேட்பேன். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டினேன். தியேட்டர் திறந்த பிறகு மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும் என்று வேண்டினேன். இப்போது வரவேண்டாம் என்று வேண்டலாமா என்று யோசிக்கிறேன்.
காரணம் இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அவர்களும் மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்று மக்கள் மீது பழியை போட்டு தவறான படங்களை எடுக்கிறார்கள். பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. என்றார்.
ஆனால் அது என்ன படங்கள் என்றோ, எந்த மாதிரியான படங்கள் என்றோ அவர் குறிப்பிடவில்லை.