ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2017ம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்ட னர். நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண உறவு சமீபத்தில் முறிந்தது. சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், நாக சைதன்யாவை பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு, விவகாரத்துக்கு சென்றால் நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். அந்த அளவுக்கு என்னை பலவீனமானவள் என்று கருதி வந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.
நான் ரொம்ப வலிமையுடனும் மன உறுதியுடனும் இருக்கிறேன். இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று கருதவில்லை. நான் வலிமையாக இருக்கிறேன் என்பதை நினைக்கையில் ரொம்ப பெருமையாக உள்ளது எனறு தெரிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தா, தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் யசோதா என்ற ஐந்து மொழிப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சர்வதேச படமான அரேஞ்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்கப்போகிறார்.