எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி என்றாலே எதிர்பார்ப்பு ஏற்படுத்தும். இருவரது கூட்டணியில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. இருவரும் இணைந்த மாமனிதன் படம் எடுத்து முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சில பிரச்னைகளால் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் படத்தை பிரச்னைகளில் இருந்து மீட்டெடுத்து விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக படத்தின் விளம்பர பணிகள் தொடங்கி உள்ளன. படத்தின் இசையமைப்பாளர்களான இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலத்தை பாடகராக அறிமுகப்படுத்தி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாடகப் பாட்டுக் கலைஞர் முத்து சிற்பி என்பவர் கலந்து கொண்டார். முதல்கட்ட தேர்விலேயே கர்ணன் பட பாடலைப் பாடி அனைவரையும் அசர வைத்தார். மேலும் தன் திறமையின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தற்போது முத்து சிற்பி சினிமாவில் பாடகராக அறிமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமனிதன்' படத்தில் அவர் ஒரு பாடல் பாடியிருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் இசையில் உருவான மாமனிதன் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமாகும் உள்ளம் கவர்ந்த பாடகர் நாடக நடிகர் தம்பி முத்துசிற்பி நாரதருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்." என்று தெரிவித்துள்ளார்.