'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியான த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த வருடம் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தையும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் எடுத்து, அதையும் வெற்றி படமாக்கினார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லாலை வைத்து டுவல்த் மேன் என்கிற படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம்-3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “த்ரிஷ்யம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. பின்னர் ஒருகட்டத்தில் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரானதும் தான் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இப்போது நிலைமை வேறு. இரண்டாம் பாகத்தின் வெற்றியால், இதன் மூன்றாம் பாகத்தை எப்போது துவங்க போகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.
சொல்லப்போனால் மூன்றாம் பாகத்திற்கான க்ளைமாக்ஸ் கூட நான் யோசித்து வைத்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொல்ல அவருக்கும் அது பிடித்துப்போய் விட்டது. ஆனால் க்ளைமாக்ஸ் வரை சரியான பாதையில் கதையை நகர்த்திக் கொண்டு வர காட்சிகள் வேண்டும் இல்லையா..? அதில் தான் சவால் இருக்கிறது. தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் இருக்கிறேன்..
அதேசமயம் மனதிற்கு திருப்தியான ஸ்கிரிப்ட் தயாரானால் தான் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி மூன்றாம் பாகத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். பேசாமல் அந்த திட்டத்தை அப்படியே போட்டுவிடுவேன்.. அதனால் இப்போதைக்கு சொல்வதென்றால் த்ரிஷ்யம் 3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது” என கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.