ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் நவ., 12ல் குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியானது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சுகுமார குருப் என்கிற கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
பான் இந்திய படமாக வெளியானதால் வெளியான ஐந்து நாட்களிலேயே 50 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்திய இந்தப்படம், இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது 75 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. துல்கரின் சினிமா பயணத்தில் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலில் இது மிகப்பெரிய சாதனை என்றே சொல்லலாம்.