ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்கிற பெயரில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை தங்களது பிறந்த நாளிலோ அல்லது தங்களது படங்கள் ரிலீசாகும் சமயத்திலோ இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு சவால் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டேவும் இந்த மரம் நடும் சவாலை செய்து முடித்துள்ளார். அவருக்கு இப்போதைக்கு பிறந்த நாளோ அல்லது பட ரிலீசோ இல்லையென்றாலும் கூட, தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவோட உறவினருமான சுஷாந்த் என்பவர் விடுத்த கிரீன் இந்தியா சவாலைத்தான் பூஜா ஹெக்டே நிறைவேற்றியுள்ளார்.
சினிமா நட்சத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் குறிப்பாக அவர்களது ரசிகர்களிடம் இப்படி மரம் நடும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊக்கப்படுத்தி தொடர்ந்து மேற்கொண்டு வருபவர் ஆந்திர மாநில எம்பி சந்தோஷ்குமார். பூஜா ஹெக்டேவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், “நீங்கள் இன்று செய்ததை பார்த்து உங்களது ரசிகர்களும் சிறந்த எதிர்காலத்துக்கான இதுபோன்ற நல்ல விஷயங்களை அப்படியே செய்வார்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.