புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
பாய்ஸ் படத்தில் குண்டு பையனாக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி. 30 கிலோ வரை எடை குறைத்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவானார். அதன்பிறகு மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன். வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா.காம் படங்களில் நடித்தார். கடைசியாக செய் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்து விடவே சின்னத்திரை பக்கம் சென்றார். டான்ஸ் வெசஸ் டான்ஸ், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். தற்போது 3 வருடங்களுக்கு பிறகு வாஸ்கோடகாமா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தை 5656 புரொடக்ஷன் சார்பில் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார். வாஞ்சி நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், என்.வி.அருண் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் கூறியதாவது: குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம். இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையிலும், சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. என்கிறார்.