கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் |
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து விட்டு ஹீரோவானவர் மாஸ்டர் மகேந்திரன். என்றாலும் மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய்சேதுபதியாக நடித்த பிறகுதான் கவனிக்கப்பட்டார். தற்போது சிதம்பரம் ரெயில்வே கேட், இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு, அர்த்தம் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து முடித்துள்ள படம் பொண்ணு மாப்பிள்ளை.
ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர்.லிங்கதுரை தயாரித்திருக்கிறார்கள். சேட்டிபாலன் எழுதி இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், புதுமுகம் ரூபிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, நந்தகுமார், ஆர்த்தி, நெல்லை சிவா, கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலிமிர்சா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சேட்டிபாலன் கூறியதாவது : இப்பொழுது கிராமங்கள் மாறிவிட்டன. கிராமத்து மனிதர்களும் அவர்களுக்குள் மலரும் காதலும் மாறிவிட்டது. இந்தக் காலத்துக்கேற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம். படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் தூத்துக்குடி மணப்பாடு பகுதிகளிலும் மற்றும் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் எடுத்து முடித்திருக்கிறோம். 57 நாட்களில் ஒரு நாளையும் வீணாக்காமல் நேரத்தைப் பொன்னாக மதித்துப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. என்றார்.