ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் இணைந்து நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளாராம் விக்னேஷ் சிவன்.
இதற்கு முன்னதாக சூர்யாவை வைத்து அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அந்தப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரவேற்பை பெறாமல் போன நிலையில், இந்தப்படத்தை நிச்சயமான வெற்றிப்படமாக கொடுக்க விரும்புகிறாராம் விக்னேஷ் சிவன்.
அதனால் படத்தை ரிலீஸ் செய்யும் சூழ்நிலையும் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொடர் விடுமுறை நாட்களை மனதில் கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.




