2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு. டைம் லூப் கதையில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் துவங்கியதில் இருந்து பல்வேறு பிரச்னைகளை கடந்து வளர்ந்து வந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.
தீபாவளிக்கு படம் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் ரஜியின் அண்ணாத்த படம் அநேக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் இந்த படம் அப்போது வெளியாகவில்லை. மாறாக நாளை(நவ.,25) இப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். தியேட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் கடைசிநேரத்தில் இந்த படம் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தெரிவித்தார்.
சிம்புவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது என மாநாடு படத்தின் முன்பதிவிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் படத்தை வெளியிட பல தரப்பினர் பேசி வந்தனர். இறுதியாக இரண்டு முக்கிய நபர்கள் தலையிட்டு இந்த பிரச்னையில் சமரசம் செய்தனர். இதையடுத்து மாநாடு படம் நாளை(நவ.,25) திட்டமிட்டப்படி வெளியாகிறது. இதை ரசிகர்கள் கொண்டாடினர்.
தொடரும் சிம்பு பட சோகம்
சிம்புவின் ஒவ்வொரு படமும் கடைசிநேரத்தில் ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்து கொண்டே இருக்கிறது. வாலு தொடங்கி இப்போது நாளை வெளியாக மாநாடு வரை ஒவ்வொரு படமும் இதுபோன்று சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கடவுள் இருக்காரு
மாநாடு படம் சிக்கல் தீர்ந்தது தொடர்பாக வெங்கட்பிரபு ‛‛கடவுள் இருக்காரு'' என தெரிவித்தார். அதோடு அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மாநாடு நாளை 25ம் தேதி வெளியாகிறது என கூறியுள்ளார்.