நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
இந்தியத் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை பல மொழிகளில் கொடுத்துள்ளார்.
இன்றைக்கும் அவரது பாடல்கள் பலருக்கும் மன அமைதியைக் கொடுத்து வருகிறது என்றால் அது மிகையில்லை. தற்போதும் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய படங்களின் பாடல்களை யூடியூப் தளத்தில் பதிவேற்ற ஆரம்பித்தார்.
பேஸ்புக் சமூக தளத்தில் 29 லட்சம் பாலோயர்களுடன் ஆக்டிவ்வாக இருப்பவர் இளையராஜா. டுவிட்டர் தளத்தில் 2015ம் ஆண்டிலேயே கணக்கை ஆரம்பித்துள்ளார். ஆனால், அதில் இதுவரை எந்தப் பதிவையும் அவர் பதிவிட்ட வரலாறு இல்லை.
முதல் முறையாக இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்கா, நியூயார்க், டைம் ஸ்கொயர் பில்போர்ட்டில் 'இசையின் ராஜா' என அவரைப் பற்றி பதிவிடப்பட்டதைப் பதிவிட்டுள்ளார். இதுதான் இளையராஜாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.