மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'.
இப்படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவு ஒரு வாரம் முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது. சென்னையில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கான முன்பதிவை ரோகிணி, ஜிகே சினிமாஸ் ஆகிய தியேட்டர்கள் ஆரம்பித்தன. அந்த காட்சிகளுக்கான முன்பதிவு மொத்தமாக முடிந்துவிட்டது. மற்ற தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அடுத்து 8 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிம்பு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களுக்குக் கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. இப்போது 'மாநாடு' படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் முன்பதிவுக்கு ஆதரவு இருக்கிறது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.