இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
2021ம் ஆண்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த், விஷால் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. நேற்று ஒரே ஒரு படம் தான் வெளியானது. அடுத்த வாரம் நவம்பர் 19ம் தேதி 'ஜாங்கோ, சபாதி' உள்ளிட்ட சில படங்கள் வெளியாக உள்ளன.
இதற்கடுத்து நவம்பர் 25ம் தேதி சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படம் வெளியாக உள்ளது. 'அண்ணாத்த' படத்துடன் போட்டி போட்டு வெளியாக வேண்டிய படம். சில பல காரணங்களால் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். 'டைம் லூப்' என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. தீபாவளி படங்கள் சில பல ஏமாற்றங்களைத் தந்ததால் இந்த 'மாநாடு' படம் அவற்றை மாற்றும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
முதல் முறையாக இணைந்துள்ள வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணி என்ன செய்திருக்கிறது என்பதைக் காண இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.