மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” | தனது கனவுப்படமான 'மகாபாரதம்' அப்டேட் கொடுத்த ராஜமவுலி | மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' |
சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'அண்ணாத்த'. இப்படம் சிவா இயக்கிய முந்தைய படங்களான 'வேதாளம், விஸ்வாசம்' உள்ளிட்ட சில பல படங்களின் கலவை என்பதுதான் அனைத்து ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது.
'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் 'வேதாளம்' படத்தின் அஜித், லட்சுமி மேனன் ஆகியோரை ஞாபகப்படுத்தியதாகவே பலரும் ஒரே மாதிரி சொன்னார்கள்.
இந்நிலையில் தற்போது 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவி தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'அண்ணாத்த' படத்தில் தங்கையாக நடித்த பின் மீண்டும் அதே போன்றதொரு கதாபாத்திரத்தில் தெலுங்கில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கீர்த்தி நடிக்க ஒப்புக் கொண்டது ஆச்சரியமாக உள்ளதாக டோலிட்டில் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு என்ன சம்பளம் வாங்குவாரோ அதே அளவு சம்பளத்தைக் கொடுத்துத்தான் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்களாம். தெலுங்கில் 'மகாநடி' படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய கீர்த்தி இம்மாதிரி ஒரே டைப்பான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்ப்பதுதான் அவரது எதிர்காலத்திற்கு சிறந்தது என அக்கறை உள்ள சிலர் சொல்கிறார்கள்.'