துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் இருளர் இன மக்களின் வாழ்க்கை பற்றி பேசியது. இந்த படத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போனார். இதை தொடர்ந்து சூர்யா, இருளர் இன மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்துவரும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார். இதற்கு சூர்யா தனது டுவிட்டரில் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில் எழுதியிருப்பதாவது: தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி, என பதிவிட்டுள்ளார்.