அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் |
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு மன உளைச்சல் காரணமாக யோகா, தியானம், ஆன்மீகம் என்று ஈடுபட்டு வந்த சமந்தா தற்போது புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு மற்றும் ஹிந்தியில் டாப்சி தயாரிக்கும் படம் என தற்போது புதிதாக மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. மேலும், தற்போது சமந்தா தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதன்காரணமாக தமிழ், தெலுங்கில் அதிகப்படியாக சம்பளம் வாங்கும் ஒரு சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவராகியிருக்கிறார்.