ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரி மகளாக அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர் அசுரன் படத்தில் தனுஷுக்கு முறைப்பெண்ணாக பிளாஷ்பேக் காட்சிகளில் அசத்தலாக நடித்திருந்தார். தொடர்ந்து கார்த்தியின் தம்பி, மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ஹரி டைரக்சனில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது கனவு வாகனமான மகிந்தரா கம்பெனியின் தயாரிப்பான தார் என்கிற புதிய வாகனத்தை (ஜீப்) சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த காரில் அமர்ந்தபடி மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மு அபிராமி.




