ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தற்போது புதுமுக இயக்குனர்கள் இருவர் இயக்கும் இரண்டு படங்களில் நடிக்கிறார் சமந்தா. அந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இதுதவிர ஹிந்தியில் ஆடுகளம் டாப்சி தயாரிக்கும் படத்திலும் சமந்தா நடிப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கில் நானி நடிக்கும் தசரா என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், அதே படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிப்பதாக இன்னொரு செய்தியும் வெளியானது. ஆனால் அந்த செய்தியை தற்போது சமந்தா தரப்பில் மறுத்துள்ளனர்.
நானியின் தசரா படத்தில் சமந்தா நடிக்கவில்லை. அதிலும் இரண்டாவது நாயகியாக அவர் நடிக்க மாட்டார். முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாக மட்டுமே நடிப்பாராம்.