விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் 'எனிமி' படம் தமிழ், தெலுங்கில் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், இயக்குனர் ஆனந்த்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஷால், “புனித் ராஜ்குமார் சிறந்த நடிகர் மட்டுமல்ல எனக்கு நல்ல நண்பரும் கூட. அவருடைய இழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தான். அவரைப் போன்ற ஒரு எளிமையான சூப்பர் ஸ்டாரை நான் இதுவரை பார்த்ததில்லை. பல சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார். புனித் ராஜ்குமாரால் 1800 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது கல்விப் பொறுப்பை அடுத்த வருடம் முதல் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.
விஷால் அவருடைய அம்மா பெயரில் உள்ள தேவி அறக்கட்டளை மூலம் ஏற்கெனவே சில சமூக சேவைகளைச் செய்து வருகிறார். தற்போது புனித் ராஜ்குமார் செய்து வந்த சமூக சேவைகளையும் எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது அவருக்கு பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.