'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்.
அதனால், புனித்தின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், விஷால், ஆர்யா, தனுஷ், நாசர், சித்தார்த், விக்ரம் பிரபு, ஆதி, கௌதம் கார்த்திக், சாந்தனு,
மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின்பாலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், சுரேஷ் கோபி,
தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ரவி தேஜா, அல்லரி நரேஷ், ஜெகபதி பாபு, மனோஜ் மஞ்சு, நாக சௌரியா, ராம் பொத்தினேனி, சாய்குமார்,
ஹிந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், அஜய் தேவகன், சோனு சூட், அர்மான் மாலிக், சுனில் ஷெட்டி,
நடிகைகள் ராதிகா, ரோஜா, சிம்ரன், த்ரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு, ரகல் ப்ரீத் சிங், நிக்கி கல்ரானி, ராஷி கண்ணா, ஆத்மிகா, அதிதி ராவ் ஹைதரி,
கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




