மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி நேற்று (அக்.,28) இரவு 8:30 மணி அளவில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‛அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்தனர். அவருக்கு ‛கரோடிட் அர்ட்டரி ரீவேஸ்குலரைசேஷன் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.