பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

என்றும் மார்கண்டேயன் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இளமையாகவே காட்சி அளிக்கும் நடிகர் நடிகர் மம்முட்டி நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். பல திசையில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதேசமயம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதமாக டாவின்சி சுரேஷ் என்கிற ஓவியர் 20 அடி உயரம் கொண்ட மம்முட்டியின் போர்ட்ரெய்ட் ஓவியத்தை அவரது பிறந்தநாள் பரிசாக உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஆம்.. சுமார் 6௦௦ மொபைல் போன்கள் மற்றும் 6000 மொபைல் போன் பயன்பாட்டிற்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் என்பதுதான் இந்த பிரமிப்புக்கு காரணம்.. இத்தனை போன்களையும் உதிரி பாகங்களையும் கொடுத்து இதை உருவாக்குவதற்கு பின்னணியில் தூண்டுதலாக இருந்துள்ளார் அனாஸ் என்கிற மொபைல் கடை உரிமையாளர்.. கே-பீஸ் என்பவர் தனக்கு சொந்தமாக உள்ள மினி ஹால் ஒன்றில் இதற்கான இடவசதியை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.