டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஒருகாலத்தில் வில்லன் நடிகராக மிரட்டியவர் மலையாள நடிகர் பாபு ஆண்டனி. தற்போது நல்ல நல்ல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பாபு ஆண்டனி.
இந்தநிலையில் மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் 'ப்ரோ-டாடி' படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட் அடித்த பாபு ஆண்டனி, மோகன்லால் பிரித்விராஜ் இருவருடனும் பழைய நினைவுகள் குறித்து அளவளாவி வந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பாபு ஆண்டனி.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் அடுத்தடுத்த தளங்களில் அருகருகே தான் நடைபெற்று வருகின்றன. தனக்கு இடையே ஒருநாள் சூட்டிங் இல்லாததால் அப்படியே ஜாலியாக மோகன்லால் பட செட்டுக்கு விசிடி அடித்துவிட்டு அருமையான பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்ததாக கூறியுள்ளார் பாபு ஆண்டனி.




