'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை, மலையாளம் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதற்கு, தனக்கு சரிப்படாது என்று கூறிவந்த நடிகர் பஹத் பாசில், தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்கிற படத்தில் வில்லனாக, போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் காட்சிகள் பாதிக்குமேல் படமாக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடித்த அதிரன் என்கிற படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அனுகோனி அதிதி என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பஹத் பாசிலுக்காக தெலுங்கில் டப்பிங் பேசி இருப்பவர் தருண் என்கிற டப்பிங் கலைஞர். இவரது குரல் பகத் பாசிலுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாம்.
இதை கேள்விப்பட்ட புஷ்பா படக்குழுவினர் இந்த படத்தின் டப்பிங்கை பார்த்துவிட்டு, தங்களது படத்திலும் பஹத் பாசிலுக்கு தருணே டப்பிங் பேச வேண்டுமென கூறிவிட்டார்களாம். இனி பஹத் பாசில் நடிக்கும் தெலுங்கு படங்களுக்கு, தருண் தான் தொடர்ந்து குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்