ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா. தர்சாகுடு, ரங்கஸ்தலம், ராஜுகாடு, பிராண்ட் பாபு, ஹேப்பி வெட்டிங், கல்கி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மிஸ்.இண்டியா படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது ஹரிகர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பூஜிதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்களின் ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனித்திருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியிருக்கிறார்.
இதேபோன்று மலையாள நடிகை பீனா அந்தோணிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 35 வருடங்களாக நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர நடிகையாக நடித்துள்ளார். தற்போது மலையாள சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.




