ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரி பாட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில் 40 சதவிகிதம் படப்பிடிப்பை முடித்து விட்டனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை தனது தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளான மே 31-ந்தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் மகேஷ்பாபு. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மே 31-ந்தேதியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்துள்ளார் மகேஷ்பாபு. அதாவது, மே 31-ந்தேதி டீசருக்கு பதிலாக இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படும். அதோடு, கொரோனா அலை ஓய்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு டீசர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.