டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வக்கீல் சாப் என்கிற படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பட தயாரிப்பாளருக்கு தற்போது ஒரு மொபைல் நம்பரால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கதைப்படி படத்தில் வில்லன் ஆட்களில் ஒருவர், கையில் வைத்திருக்கும் மொபைல் போனுக்கு, அந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலியின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோ ஒன்று, வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண் திரையில் காட்டப்படும்போது பார்ப்பவர்களுக்கு பளிச்சென தெரியும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் அந்த தொலைபேசி எண் தனக்குரியது என்றும், அந்த நம்பரை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதால், தொடர்ந்து தனக்கு அருவருக்கத்தக்க வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் பஞ்சகுட்டா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் சுதாகரின் வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




