ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையும் அது ஏற்படுத்திவரும் பாதிப்பும் கடந்த வருடத்தை விட வீரியமாகவே இருக்கிறது. இதனால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தரப்பில் இருந்தும் திரையுலக பிரபலங்கள் தரப்பில் இருந்தும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என கூறி சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு..
மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடுபவர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். முன்னெப்போதையும் விட இப்போது பிளாஸ்மா தானம் தருபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து கமிஷனர் சஜ்ஜனார் துவங்கி வைத்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னையும் இணைத்துக்கொண்டு எனது ஆதரவை வழங்கியுள்ளேன். நீங்களும் பிளாஸ்மா தனம் செய்யுங்கள்.. பலரது வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.